பு தோ, 03 ஜனவரி (பெர்னாமா) - வரும் கோடை காலத்தில் லிவர்பூலின் முன்னணி தாக்குதல் நட்சத்திரம் முஹமட் சாலாவை இலவச ஒப்பந்தத்தில் பெறுவதற்குப் பிரான்சின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன்- பிஎஸ்ஜி கிளப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அன்ஃபீல்ட் அரங்கில் சாலாவின் ஒப்பந்தம் இந்த பருவத்தோடு முடிவடையும் நிலையில் புதிய ஒப்பந்தத்தின் விதிமுறைகளை லிவர்பூல் இன்னும் அவரிடம் இறுதி செய்யாமல் உள்ளது.
லிவர்பூலின் அனுமதியின்றி சாலா தற்போது இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் இல்லாத கிளப்களுடன் அதிகாரப்பூர்வ பேச்சுக்களை மேற்கொள்ளவோ அல்லது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவோ முடியும் என்றும் கூறப்படுகிறது.
32 வயதான சாலாவை வாங்கும் எண்ணத்தில் சவூதி அரேபியா நீண்ட காலமாக இருந்தாலும் அவரைப் பாரிஸ்சுக்கு அழைத்து வருவதற்கு தற்போது பிஎஸ்ஜி விரும்புகிறது.
வாரம் ஒன்றுக்கு 23 லட்சம் ரிங்கிடைச் சம்பளமாக கொடுத்து மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்ய பிஎஸ்ஜி காத்துக்கொண்டிருக்கும் வேளையில் லிவர்பூல் அவருக்கு 18 லட்சம் ரிங்கிட்டை மட்டுமே வார சம்பளமாக வழங்க முன்வந்துள்ளது.
சம்பளம் மற்றும் ஒப்பந்த காலம் ஆகியவற்றின் அடிப்படையில் பிஎஸ்ஜியின் சிறந்த சலுகைகள் ஆகியவற்றால் சாலா தமது எதிர்காலம் குறித்து ஆழமாக சிந்திக்க நேர்ந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)