பொது

WEF கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பார்

12/01/2025 06:35 PM

கோலாலம்பூர், 12 ஜனவரி (பெர்னாமா) - சுவிட்சர்லாந்து டாவோசில் நடைபெறும் WEF எனும் உலகப் பொருளாதார மன்றத்தின் 2025-ஆம் ஆண்டுகூட்டம்  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பங்கேற்பார்.

அன்வாரின் வருகையை WEF தனது LinkedIn பதிவின் வழி சனிக்கிழமை உறுதிப்படுத்தியது.

WEF-பின் இந்த 55-வது ஆண்டு கூட்டம் வரும் ஜனவரி 20 முதல் 24-ஆம் தேதிவரை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் கொலஸ்தெர்சில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 

"Collaboration for the Intelligent Age" என்ற கருப்பொருளில்  இக்கூட்டம்  உலகளாவிய மற்றும் வட்டார சவால்களை எதிர்கொள்ளும், அரசாங்கம், வணிகம் மற்றும் பொது சமூகத்தைச் சேர்ந்த அனைத்துல தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது. 

புவிசார் அரசியல் கேள்விக்களுக்கு பதிலளிப்பது, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவது, நியாயமான மற்றும் எரிசக்தி மாற்றத்தை வழிநடத்துவது போன்றவை அதில் விவாதிக்கப்படும் முக்கிய தலைப்புகளில் அடங்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)