பட்டாணி, 13 ஜனவரி (பெர்னாமா) -- தெற்கு தாய்லாந்து, பட்டாணியில் முயாங் பட்டாணி மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு மலேசியரும் ஆறு தன்னார்வலர்களும் காயத்திற்கு ஆளாகினர்.
சம்பந்தப்பட போலீஸ் நிலையத்தில், அதன் உறுப்பினர்களுக்கான அணிவகுப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர், காலை சுமார் 8 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக முயாங் பட்டாணி போலீஸ் தலைவர், கேஓஎல். பிஓஎல். ஜெஃப்ரி சுலைமான் தெரிவித்தார்.
போலீஸ் நிலையத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் இந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக ஜெஃப்ரி சுலைமான் கூறினார்.
அந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து உடைந்த கண்ணாடி துண்டுகளால் கோலாலம்பூரைச் சேர்ந்த அந்த 20 வயதான மலேசியருக்குக் காயம் ஏற்பட்டது.
காணாமல் போன தங்களின் பயண ஆவணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற தமது மனைவிக்காக அவர் காரில் காத்திருக்கும்போது இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் கார் சம்பவ இடத்திற்குச் சுமார் 10 மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பட்டாணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)