பேங்காக், 27 ஜனவரி (பெர்னாமா) -- மே முதலாம் தேதி தொடங்கி வெளிநாட்டு கடப்பிதழை பயன்படுத்தும் சுற்றுப்பயணிகள் இலக்கவியல் வருகை அட்டையை விண்ணப்பிக்க வேண்டும் என்று தாய்லாந்து குடிநுழைவுத்துறை அறிவித்திருக்கிறது.
வான், தரை மற்றும் கடல் வழியாக தாய்லாந்துக்கு வருபவர்களும் அந்நாட்டில் இருந்து புறப்படுபவர்களும் TM6 படிவம் எனப்படும் அட்டையை இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விசா விலக்கு பெற்ற நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வருகை அட்டையை விண்ணப்பிக்க வேண்டும் என்று குடிநுழைவுத்துறை கூறியது.
வருகை அட்டையை விண்ணப்பிப்பதற்கு கட்டணம் விதிக்கப்படவில்லை.
கடப்பிதழ் விவரங்கள், முகவரி மற்றும் பயணத் தகவல்கள் ஆகியவற்றை TM6 படிவத்தில் நிரப்ப வேண்டும்.
தாய்லாந்து கடப்பிதழை கொண்டிருப்பவர்கள் இலக்கவியல் வருகை அட்டையை விண்ணப்பிக்க அவசியம் இல்லை.
தாய்லாந்தில் இருக்கும்போது சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்க இலக்கவியல் வருகை அட்டை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]