சியோல் , 19 ஜனவரி (பெர்னாமா) -- கைது செய்யப்பட்ட தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்குத் தடுப்புக் காவல் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 3ஆம் தேதி அந்நாட்டில் இராணுவ ஆட்சியை அறிவித்தது தொடர்பான விசாரணைகள் அவரிடம் தொடரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த அனுமதியின் வழி அவரின், தடுப்புக்காவல் காலம் நீட்டிக்கப்படலாம் என்று சியோல் மேற்கு மாவட்ட நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டது.
யூன் சுக் யோலின் தடுப்பு காவலை 20 நாள்கள் வரை நீட்டிக்க விசாரணை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தனர்.
சியோல் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் விசாரணையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து வருகிறார்.
தென் கொரியாவில் இராணுவ ஆட்சியை அறிவித்தது தொடர்பில் விசாரணக்காக, ஆட்சியில் இருக்கும்போது கைது செய்யப்பட்ட முதல் அதிபர் இவராவார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)