பொது

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 264 தொலைத்தொடர்பு கோபுரங்கள் சீரமைப்பு

20/01/2025 04:55 PM

தும்பாட், 20 ஜனவரி (பெர்னாமா) -- கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 264 தொலைத்தொடர்பு கோபுரங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

அந்த கோபுரங்கள் தற்போது வழக்கம் போல் இயங்குவதாகவும் அவற்றின் செயல்பாடுகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''தள கடினப்படுத்துதல் எனப்படும் இதுபோன்ற கோபுரங்களை மேம்படுத்தப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்நடவடிக்கைகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு பெற வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயார்நிலை மேற்கொள்ளும் மாதமாக அக்டோபர் மாதம் உள்ளது என்பது நமக்குத் தெரியும், '' என்றார் அவர்.

திங்கட்கிழமை, கிளந்தான் தும்பாட், கம்போங் ஜுபகர் பாந்தாயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரத்தைப் பார்வையிட்ட பின்னர், ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.

மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி அனைத்து தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுடனும் பட்டறையை நடத்த வேண்டும் என்றும் ஃபஹ்மி கேட்டுக் கொண்டார்.

இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை என்றாலும் எதிர்காலத்தில் பாதிக்கப்படக்கூடிய தொலைத்தொடர்பு கோபுரப் பகுதிகளை அடையாளம் காண இப்பட்டறை வழிவகுக்கும் என்று அவர் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)