அரசியல்

தேர்தல்களில் அதிகமான தொகுதிகளில் வெல்வதை இலக்காகக் கொண்டு ம.சீ.ச போட்டியிடும்

01/03/2025 05:57 PM

கோலாலம்பூர், 01 மார்ச் (பெர்னாமா) -- அதிகமான தொகுதிகளில் வெல்வதை முதன்மை குறிக்கோளாகக் கொண்டு, ம.சீ.ச வருகின்ற அனைத்து மாநில மற்றும் பொதுத் தேர்தல்களில் போட்டியிடும்.

தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தனது தொகுதிகளில் ம.சீ.ச வெற்றி பெறத் தவறியதால், அக்கட்சி தனது ஆளுமையை இழக்கும் ஆபத்தில் உள்ளதோடு தனது பங்கை நிறைவேற்றுவதிலும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார்.

''தேசிய முன்னணியில் உள்ள ம.சீ.ச-வின் இலக்கு இனி என்ன நாங்கள் சிந்திக்கவுள்ளோம்? நாங்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும். மாநில மற்றும் பொதுத் தேர்தலில் சதுரங்க ஆட்டம் பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்வதை நாங்கள் பார்க்கிறோம். யார் யாரை எதிர்கொண்டாலும், தயார்நிலை பணிகளை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.

இன்று, விஸ்மா ம.சீ.ச-வில், அக்கட்சியின் 76 வது நிறைவு ஆண்டை கொண்டாடியப் பின்னர் செய்தியாளர்களிடம் வீ அவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில், வீ ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காத்துக் கொண்ட வேளையில், டத்தோ ஶ்ரீ வீ ஜெக் செங், தஞ்சோங் பியாய் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்.

மேலும், செண்டெரியாங், மச்சாப் ஜெயா, கிளேபாங், பேகோக், யோங் பெங், பாலோ மற்றும் பெக்கான் நானாஸ் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் ம.சீ.ச வெற்றி பெற்றிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)