குஜராத், 12 ஜூலை (பெர்னாமா) -- குஜராத் மாநிலத்தில் கம்பீரா எனும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்திருக்கிறது.
இச்சம்பத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் இருவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாண்டவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
வதோதரா மற்றும் ஆனந்த் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் இப்பாலம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
கடந்த 9-ஆம் தேதி பாலம் இடிந்து விழுந்த போது, அதில் சென்று கொண்டிருந்த இரு லாரிகள், இரு வேன்கள், ஆட்டோ ரிக்ஷா ஒன்று மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை ஆற்றுக்குள் விழுந்தன.
இந்நிலையில், இந்த விபத்திற்குப் பாலத்தின் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தின் எதிரொலியாக அம்மாநிலத்தில் உள்ள சுமார் 7,000 பாலங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)