நியூயார்க், 12 ஜூலை (பெர்னாமா) -- காசாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பல நாள்கள் உணவு உண்ணாமல் உள்ளதாக ஐ.நா.வின் உணவு நிறுவனத் துணை இயக்குநர், கார்ல் ஸ்காவ் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அங்கே உணவு விநியோகம் மற்றும் உதவிகள் வழங்குவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
''ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்து வருகிறது. யுனிசெஃப்பின் எண்ணிக்கையை நீங்கள் பார்த்திருக்கலாம், தற்போது 90,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. காசாவில் 3 பேரில் ஒருவர் பல நாட்கள் சாப்பிடாமல் உள்ளனர். மேலும், தங்கள் குழந்தைகள் சாப்பிடாமல் இருக்கும் நாட்கள் உள்ளன என்று கூறிய பல குடும்பங்களை நான் சந்தித்தேன்,'' என்று அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் நான்காவது முறையாக காசாவிற்குச் சென்று அங்குள்ள நிலவரங்களை அவர் கண்டறிந்தார்.
இராணுவத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட உறுதிமொழிகளைச் செயல்படுத்த, போர்நிறுத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலினால், இதுவரை 57800 பேர் உயிரிழந்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)