ஜெருசலம், 17 ஜூலை (பெர்னாமா) -- தென் சிரியாவில் உள்ள டுருஸ் (Druze) சிறுபான்மை சமூகத்தை அரசாங்கப் படைகள் தாக்கியதைத் தொடர்ந்து சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் பெரியளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கின்றது.
இத்தாக்குதலில், தற்காப்பு அமைச்சு கட்டிடத்தின் ஒரு பகுதி அழிந்ததோடு அதிபர் மாளிகைக்கு அருகிலுள்ள பகுதிகளும் தாக்கப்பட்டன.
அமெரிக்காவுடன், சிரியா நெருக்கமான உறவைக் கொண்டிருந்தாலும் அதிபர் அஹ்மெட் அல்-ஷாராவின் இடைக்கால நிர்வாகத்தின் கீழ் இருக்கும் அங்கு அண்மைய காலமாக இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இருப்பினும், சிரியாவின் புதிய தலைவரை மறைந்திருக்கும் ஜிஹாட் பயங்கரவாதி என்று இஸ்ரேல் வர்ணித்திருக்கிறது.
மேலும், தென் சிரியாவில் எந்தவோர் இராணுவப் படையை நிறுத்த அனுமதிப்பதில்லை என்றும் இஸ்ரேலிய மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் உள்ள டுருஸ் சிறுபான்மை சமூகத்தை பாதுகாப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
இதனிடையே, இரு நாடுகளுக்கு இடையே மூண்டிருக்கும் போர் விரைவில் தணியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]