Ad Banner
Ad Banner
 பொது

டோல் கட்டண உயர்வு ஒத்திவைப்பு; பத்து லட்சம் வாகனமோட்டிகளுக்கு பயன்

29/07/2025 05:21 PM

கோலாலம்பூர், 29 ஜூலை (பெர்னாமா) -- நாட்டில் உள்ள 10 நெடுஞ்சாலைகளின் டோல் கட்டண உயர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், ஏறக்குறைய பத்து லட்சம் வாகனமோட்டிகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உணர்வார்கள்.

ஏனெனில், சாலைப் பயனர்களிடம் வசூலிக்கப்படும் கட்டண விகிதத்திற்கும் குத்தகை ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதத்திற்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

குத்தகை ஒப்பந்த அடிப்படையில், சம்பந்தப்பட்ட 10 நெடுஞ்சாலைகளுக்கான, முதலாம் வகுப்பபு வாகனங்களுக்கான கட்டண உயர்வு 50 சென் முதல் 4 ரிங்கிட் 56 சென் அல்லது 79 முதல் 83 விழுக்காடு வரை இருந்ததாக அலெக்சண்டர் நந்தா லிங்கி கூறினார்.

2025-ஆம் ஆண்டில், குத்தகை ஒப்பந்த அடிப்படையில் டோல் கட்டணம் 6 ரிங்கிட் 90 சென் என்றும், தற்போது ஒருவழி பயணத்தின் டோல் கட்டணம் 3 ரிங்கிட் 50 சென் என்ற நிலையை தக்கவைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த மொத்த சேமிப்பை 20 நாள்கள் வரை பெருக்கினால், அதாவது ஒரு மாதம் அல்லது 240 நாட்கள் (ஓர் ஆண்டு) பயன்படுத்தினால், மக்கள் அனுபவிக்கும் சேமிப்பு மாதத்திற்கு 136 ரிங்கிட் அல்லது வருடத்திற்கு 1,632 ரிங்கிட் ஆகும்.

இன்று, மக்களவையில், 2025-ஆம் ஆண்டில் டோல் கட்டண உயர்வை அரசாங்கம் ஒத்திவைக்காவிட்டால், நெடுஞ்சாலை பயனர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)