Ad Banner
Ad Banner
 பொது

எஸ்.எல்.டி பொருத்தப்படாத வணிக வாகனங்கள், சாலையைப் பயன்படுத்த தடை

29/07/2025 05:30 PM

கோலாலம்பூர், 29 ஜூலை (பெர்னாமா) -- வேகக் கட்டுப்பாட்டு சாதனம், எஸ்.எல்.டி அமைப்பு பொருத்தப்படாத வணிக வாகனங்கள், சாலையைப் பயன்படுத்த முடியாது.

அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி கட்டம் கட்டமாக தொடங்கப்படும், எஸ்.எல்.டி அமைப்பின் அமலாக்கத்திற்குப் பிறகு, வாகன பரிசோதனைகளில் தேர்ச்சி பெறாததைத் தொடர்ந்து, அவற்றுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

கனரக வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், மரண விபத்து ஆபத்தைக் குறைக்கவும் எஸ்.எல்.டி அமைப்பு முறை முக்கியமான நடவடிக்கையாகும் என்று அந்தோணி லோக் கூறினார்.

''கூடுதல் செலவுகள் ஏற்படும் என்று கூறி தொழில்துறையில் ஈடுபடுபவர்களிடமி இருந்து எதிர்ப்பு இருக்கலாம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், சிறந்த சாலைப் பாதுகாப்பை உறுதி செய்தைப் பொறுத்தவரை, மனித உயிர்கள் மிகவும் முக்கியம். இந்தச் அமலாக்கம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இதனால், என்னென்ன பின்னடைவுகள் இருந்தாலும், வணிகச் செலவுகள் மற்றும் இலாபங்களை விட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்''. என்றார் அவர். 

எஸ்.எல்.டி அமைப்பை செயல்படுத்துவதன் தாக்கம் மற்றும் அமலாக்கச் செலவு, அமைப்பை பராமரித்தல் மற்றும் அது செயல்படத் தவறினால் ஏற்படும் விளைவுகள் உட்பட பிற நாடுகள் எஸ்.எல்.டி அமைப்பை கட்டாயமாக்கிவிட்டனவா என்பது குறித்து பெதோங் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)