Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து இந்தோனேசியாவில் ஆர்ப்பாட்டம்

30/08/2025 04:36 PM

ஜகார்த்தா, 30 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இந்தோனேசியா, ஜகார்த்தாவில், வியாழக்கிழமை, போலீஸ் வாகனத்தால் மோதப்பட்டு  நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மக்கள் பண்டுங்கில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

போலீஸ் துறையை சீர்திருத்த வேண்டும் என்ற கோரிக்கையை இச்சம்பவம் தூண்டியுள்ள நிலையில் அதிபர் பிரபொவோ சுபியந்தோவின் ஏறத்தாழ ஓராண்டு கால ஆட்சியில் இது முதல் மிகப் பெரிய சோதனையாக உருவாகியுள்ளது. 

நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகே நடந்த வன்முறை மோதலின்போது பொருள் அனுப்பும் சேவை பணியில் ஈடுப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டியான  அந்நபர் மோதித் தள்ளப்பட்டார்

வெள்ளிக்கிழமை இரவும் ஆர்பாட்டம் நீடித்ததால், கட்டிடங்கள் எரிவதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தீப்பிடிக்கும் பொருள்களை வீசிவதும் காணொளிகளில் பதிவாகியுள்ளன.

இதனால், தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் இந்தோனேசியா மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு நிலவரத்தில், உயிரிழந்த நபரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள ஜகார்த்தாவில் உள்ள ஒரு மையத்துக் கொல்லையில், நேற்று நூற்றுக்கணக்கான ஈ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் ஒன்று கூடினர்.

அந்தக் கலவரத்தின்போது கொஜெக் மற்றும் கிராப் சேவையில் ஓட்டுநராக பணியாற்றிய அஃபான் குர்னியாவான் மீது போலீஸ் வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தாக ஜகார்த்தா போலீஸ் தலைவர் அசெப் எடி சுஹெரி கூறினார்.

எனினும், குர்னியாவான் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சங்கம் தெரிவித்துள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]