ஜலாலாபாத், 01 செப்டம்பர் (பெர்னாமா) - கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று நள்ளிரவில் நிகழ்ந்த இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவை கருவியில் 6.0-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அருகே உள்ள ஜலாலாபாத் எனும் பகுதியில் இந்நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது
10 கீலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து காயமடைந்த நபர்கள் ஹெலிகாப்டர்கள் வழி பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கும் பணிகளில் தலிபான் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானின் மேற்கு மாநிலமான ஹெராட்டில் ஹெராட் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 2,400 பேர் கொல்லப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)