Ad Banner
 பொது

சிலாங்கூர் எஃப்.சி ஆதரவாளர்களுக்குத் தடுப்பு காவல்

02/02/2026 05:50 PM

கோலா திரெங்கானு, பிப்ரவரி 02 (பெர்னாமா) -- ஜம்பதான் அங்காட் கோலா திரெங்கானுவில் நேற்று ஏற்பட்ட கலவரம் தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் சிலாங்கூர் எஃப்.சி அணியின் ஆதரவாளர்கள் 33 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோலா திரெங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த தடுப்பு காவல் உத்தரவைப் பிறப்பித்தது.

நேற்றிரவு, திரெங்கானு, கோலா நெருசுவில் உள்ள சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் மைதானத்தில் சிலாங்கூர் எஃப்.சிக்கு எதிரான திரெங்கானு எஃப்.சியின் சூப்பர் லீக் போட்டிக்கு முன்னதாக மாலை சுமார் 6.30 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுநீரக பரிசோதனைக்காகக் கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 400 ஆதரவாளர்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த 33 பேரும் அடங்குவர் என்று பெர்னாமா தொடர்புக் கொண்ட போது கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முஹமட் நோர்

ஜம்பதான் அங்காட் கோலா திரெங்கானுவை நோக்கி சிலாங்கூர் எஃப்.சி அணியின் ஆதரவாளர்கள் கொண்ட குழு ஒன்று சம்பந்தப்பட்ட அணியின் கொடியை ஏந்தியவாறு அணிவகுப்பு செய்ததும் பாலத்தின் நடுவில் தீப்பொறியை ஏற்றுவதைப் போன்றும் காணொளி ஒன்று முன்னதாகச் சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)