முனிக், 07 ஏப்ரல் (பெர்னாமா) -- ரியல் மாட்ரிட் தாக்குதல் ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே பெரிய போட்டிகளில், குறிப்பாக பயர்ன் முனிக்கிற்கு எதிரான ஐரோப்பிய வெற்றியாளர் ஆட்டங்களில் பங்கேற்கவே அணியில் சேர்க்கப்பட்டதாக அவ்வணியின் பயிற்றுநர் அல்வாரோ அர்பெலோவா கூறினார்.
15 முறை வெற்றியாளரான இந்த அணியின் முக்கிய நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் விளையாடும்போது சரியான சமநிலையைப் பெற முடியுமா என்ற கேள்வி இருந்தாலும் எம்பாப்பே அணியின் முக்கிய தூணாக இருப்பார் என்று வலியுறுத்தினார்.
கிளப்பின் அதிக கோல் அடித்தவரான எம்பாப்பே முழங்கால் காயம் காரணமாக, மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான இரு காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளின் தொடக்க அணியில் இடம்பெறவில்லை.
அந்தப் போட்டிகளிலும் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.
இப்போது மீண்டும் உடல் நலமடைந்த நிலையில் எம்பாப்பே, வினிசியஸ் ஜூனியருடன் இணைந்து பயர்ன் முனிக்கிற்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வைக்க வாய்ப்பு உள்ளதாக அர்பெலோவா குறிப்பிட்டார்.
ஆதலால், வெற்றி வாய்ப்பு தங்களுக்குச் சாதகமாக இருக்கும் எனவும் அவர் நம்புகிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)