தென் கரோலினா, 07 ஏப்ரல் (பெர்னாமா) -- சார்லஸ்டன் பொது டென்னிஸ் போட்டியில் கிண்ணத்தை மீண்டும் வென்று நடப்பு வெற்றியாளரான ஜெசிகா பெகுலா சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்க வீராங்கனையான அவர், உக்ரேனின் யூலியா ஸ்டாரோடுப்ட்சேவாவை நேரடி செட்களில் தோற்கடித்தார்.
இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகும் அரையிறுதி ஆட்டத்தில் சிரமத்தை எதிர்நோக்கினாலும், பெகுலா இறுதி ஆட்டத்தை 6-2 6-2 என்று நேரடி செட்களில் கைப்பற்றினார்.
இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் வரை நீடித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, சார்லஸ்டன் பொது டென்னிஸ் போட்டியின் வெற்றியையும் பதிவு செய்து, 32 வயது பெகுலா இவ்வாண்டு தமது பருவத்தைச் சிறப்பாகத் தொடங்கியுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)