Ad Banner
Ad Banner
 உலகம்

ஒரே இரவில் ஈரானை வீழ்த்தி விடுவேன் - டிரம்ப் மிரட்டல்

07/04/2026 06:09 PM

வாஷிங்டன், 07 ஏப்ரல் (பெர்னாமா) -- ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை ஈரான் ஏற்காவிட்டால் ஒரே இரவில் ஈரானை வீழ்த்தி விடுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று மிரட்டல் விடுத்திருந்தார்.

அந்த இரவு செவ்வாய்க்கிழமை மாலையாக இருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

செவ்வாய்க்கிழமை ஈரானுக்கான காலக்கெடு முடியும் பட்சத்தில் ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரான் முழுவதும் உள்ள பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழிப்பதற்கான திட்டம் தனது நிர்வாகத்திடம் இருப்பதாக டோனல்ட் டிரம்ப் கூறினார்.

இருந்த போதிலும் போர்நிறுத்த ஒப்பந்தம் அல்லது ஹோர்முஸ் வழித்தடத்தை மீண்டும் திறப்பது தொடர்பாக அவர் முன்பு அறிவித்திருந்த காலக்கெடுவை அவரே பலமுறை மாற்றியுள்ளார்.

அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும் அது போர்க்குற்றமாகக் கருதப்படுமா என்ற கேள்வியில் தாம் கவலைப்படவில்லை எனவும் டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், மேற்கு ஆசியாவில் அமெரிக்கா அவமானம் அடைந்தது என்றும், அவரது அச்சுறுத்தல்களுக்கு ஒரு போதும் அஞ்சப்போதில்லை என்றும் ஈரான் பதிலடியாகக் கூறிருக்கின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)