Ad Banner
Ad Banner
 பொது

தேசிய வியூக  முன்னுரிமையாக மாற்றம் கண்டுள்ள 'எரிசக்தி பாதுகாப்பு'

14/04/2026 03:54 PM

கோலாலம்பூர், 14 ஏப்ரல் (பெர்னாமா) -- அண்மைய காலமாக ஏற்பட்டுள்ள பதற்ற நிலை மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் இடையூறுகள், உலக அளவிலான எரிசக்தி சந்தையில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

எரிசக்தி பாதுகாப்பு இனி விருப்பத் தேர்வாக இருக்காது, மாறாக, அது ஒரு தேசிய வியூக முன்னுரிமையாக மாறியுள்ளது.

எண்ணெய் விலைகள் தொடர்ந்து ஏற்றத் தாழ்வுகளுக்கு உட்பட்டிருப்பதால்,  மின்சாரம், வணிகச் செலவுகள் மட்டிமின்றி பொருளாதாரத்தையும் நேரடியாக பாதிப்பதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார். 

''எனவே, நீண்டகால மீள்திறனை உறுதி செய்வதற்காக, நிலையான, உள்நாட்டு மற்றும் நீடித்த எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்துவதன் மூலம் நமது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். அதேவேளையில், இன்றைய உலகப் பொருளாதாரத்தில் முதலீட்டு முடிவுகளைத் தீர்மானிப்பதில் தூய்மையான எரிசக்தி விநியோகமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது,'' என்றார் அவர். 

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற பெருநிறுவன பசுமை மின் திட்டம், சி.ஜி.பி.பி நிறைவு விழாவில் சிறப்புரையாற்றியபோது ஃபடில்லா யூசோஃப் அவ்வாறு கூறினார்.

இன்றைய உலகப் பொருளாதாரத்தில் முதலீட்டு முடிவுகளைத் தீர்மானிப்பதில் தூய்மையான எரிசக்தி விநியோகமும் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]