செமினி, 14 ஏப்ரல் (பெர்னாமா) -- உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ளவும், நெருக்கடி ஏற்படும்போது வெளித் தரப்பினரைச் சார்ந்திருக்காமல் இருக்கவும், மலேசியா தனது தொழில்நுட்ப இறையாண்மையின் அம்சங்களை வலுப்படுத்த வேண்டும்.
உலகளாவிய பதற்றங்கள், விநியோகச் சங்கிலி இடையூறுகள் மற்றும் வல்லரசுகளுக்கு இடையிலான தொழில்நுட்பப் போட்டி ஆகியவை, வருங்காலத்தில் முக்கியத் தொழில்நுட்பங்களை அணுகுவதை உறுதிசெய்ய, மலேசியா தனது சொந்த தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துவதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் டத்தோ சாங் லி காங் கூறினார்.
''அந்தத் தொழில்நுட்பம் நம் நாட்டினால் உருவாக்கப்படாமல், வேறொரு நாட்டிற்குச் சொந்தமாக இருந்திருந்தால், அவர்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்க சாத்தியம் உள்ளது,'' என்றார் அவர்.
இன்று, செமினியில் உள்ள நொட்டிங்ஹம் மலேசியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு தேசிய அறிவியல் வார திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பிறகு டத்தோ சாங் அவ்வாறு தெரிவித்தார்.
எதிர்கால சவால்களை எதிர்கொள்வதில் நாட்டின் மீள்திறன் வலுவாக இருப்பதை உறுதிசெய்ய, மலேசியா தொழில்நுட்பப் பயனீட்டாளர்களை மட்டுமல்ல, தொழில்நுட்பப் படைப்பாளர்களையும் உருவாக்க வேண்டும்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]