மணிப்பூர், 15 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நேற்று, செவ்வாய்க்கிழமை நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின.
போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால், காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மெய்தி (Meitei) சமூகத்தினர் பெரும்பாலும் வசிக்கும் பிஷ்னுப்பூர் மாவட்டத்தில், ஏப்ரல் 7ஆம் தேதி ஒரு வீட்டில் குண்டு வெடித்ததில், பெரும்பாலும் இந்துக்களான Meitei சமூகத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதை அடுத்து இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகளும் முதலமைச்சர் அலுவலகமும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலை குக்கி (Kuki) போராளிகள் நடத்தியதாக மெய்தி சமூகத்தினர் குற்றம் சாட்டினர்.
எனினும், குக்கி குழுக்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன.
பொருளாதார சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பு ஒதுக்கீடுகள் தொடர்பாக, மணிப்பூரில் ஆதிக்கம் செலுத்தும், பெரும்பாலும் இந்துக்களான மெய்தி சமூகத்தினருக்கும், பெரும்பாலும் கிறிஸ்துவர்களான குகி பழங்குடியினருக்கும் இடையே 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் மோதல்கள் நடத்து வருகின்றன.
இந்த மோதல்களால் இதுவரை சுமார் 260 பேர் உயிரிழந்ததோடு, 60,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]