புத்ராஜெயா, 16 ஏப்ரல் (பெர்னாமா) -- மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு மலேசியா வந்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கு, இன்று புத்ராஜயாவில் உள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
காலை மனி 9.56-க்கு வந்த அல்பானீசை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, மலேசிய மற்றும் ஆஸ்திரேலிய தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.
அரச மலாய் இராணுவப் படையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மற்றும் 103 உறுப்பினர்களின் மரியாதை அணிவகுப்பை அந்தோனி அல்பானீஸ் பார்வையிட்டார்.
இந்த அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சியில், துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப், வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் உட்பட அமைச்சரை உறுப்பினர்களும், அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]