Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

தற்போதைய  இடப் பங்கீட்டு முறையை தேமு தொடரும்

18/04/2026 07:47 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 18 (பெர்னாமா) -- விரைவில் நடைபெறவிருக்கும் மாநில மற்றும் பொதுத் தேர்தல்களை எதிர்கொள்ள தற்போதுள்ள இடப் பங்கீட்டு முறையையே தேசிய முன்னணி தொடரும்.

இவ்விவகாரத்தை முன்னிட்டு தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது அவற்றை அதிகரிக்க வேண்டுமா என்பதை...

ஆராயும் பணியில் கட்சியின் பொது செயலாளர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் ஈடுபடுத்தப்படுவார் என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். 

"நமது ஒற்றுமையின் மூலமாக இத்தனை காலமாக தங்களுக்கு ஏற்ற பொருத்தமான தொகுதிப் பங்கீட்டை அவர்களால் பெற முடிந்ததையும் இது உணர்த்தும்," என்றார் அவர்.

இன்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையமான WTCKL-லில் நடைபெற்ற மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் கிம்மாவின் 46-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, இன்றைய ஆண்டுக்கூட்டத்தில் கிம்மா முன்னெடுத்திருக்கும் எட்டு தீர்மானங்கள், அரசியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதிலும் துணைப் புரியும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அமைச்சு மற்றும் அது சார்ந்த நிறுவனங்களை உட்படுத்தி பல்வேறு தடைகளை எதிர்கொண்ட போதிலும், கிம்மாவின் பெரும்பாலான தீர்மானங்களுக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டும் அவை நடைமுறைக்கு வர கட்சி உரிய முன்னெடுப்பை மேற்கொள்ளும் என்று சாஹிட் ஹமிடி உறுதி கூறினார்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)