சைபர்ஜெயா, 24 ஏப்ரல் (பெர்னாமா) -- உள்நாட்டு வருமான வரி வாரியம், எல்.எச்.டி.என்-இன் நேரடி வரி வசூல், முதல் முறையாக 20,000 கோடி ரிங்கிட் என்ற அளவைக் கடந்து, கடந்தாண்டு 20,399 கோடியே 10 லட்சம் ரிங்கிட்டை எட்டியது.
இந்த அடைவுநிலை, அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 1919 கோடி ரிங்கிட் அல்லது 10.38 விழுக்காட்டு உயர்வைக் காட்டுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ள அவரின் உரையை துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் வாசித்தார்.
''வலுவான வசூல் அடைவுநிலையின் விளைவாக, நிலுவையில் உள்ள வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்களுக்கு 1,1140 கோடி ரிங்கிட் கூடுதல் வரித் திருப்பிச் செலுத்தும் நிதியை அரசாங்கத்தால் ஒதுக்க முடிந்துள்ளது. அதே வேளையில், அது கடந்தகால கடமைகளை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வெளிப்படையான முறையில் தீர்த்து வைத்துள்ளது. உண்மையில், ஒரு நல்ல வரிவிதிப்பு முறை என்பது வசூலில் திறமையானது மட்டுமல்ல, நியாயமானதாகவும் சமமானதாகவும் இருக்கிறது,'' என்றார் அவர்.
வரிவிதிப்பு என்பது வெறும் சட்டப்பூர்வக் கடமை மட்டுமல்ல.
மாறாக, அது கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கு அரசாங்கம் நிதியளிக்க வழிவகுக்கும் ஒரு பகிரப்பட்ட நம்பிக்கையாகும் என்று அவ்வுரையில் குறிப்பிடப்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]