வாஷிங்டன், ஏப்ரல் 28 (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கலந்து கொண்ட ஊடகவியலாளர் நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற நபர் மீது, கொலை முயற்சி தொடர்பில் கூட்டரசு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீல நிறத்திலான கைதுச் சட்டை அணிந்திருந்த குற்றம் சாட்டப்பட்ட 31 வயதான
Cole Thomas Allen மீது சுடும் ஆயுதம் தொடர்பில் மேலும் இரு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவரிடமிருடந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படாத நிலையில் விசாரணை முடியும் வரை அவர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹில்டன் தங்கும் விடுதியில் போடப்பட்டிருந்த பாதுகாப்பை மீறி நுழைய முயன்றபோது, இரு வகை சுடும் ஆயுதங்களையும் மூன்று கத்திகளையும் Allen வைத்திருந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
பாதுகாப்பை மீறி அந்நபர் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
எனினும், கீழ் மாடியில் இருந்த டிரம்ப் உட்பட மற்ற விருந்தினர்களை தாக்குவதற்குள் பாதுகாப்புப் படையினர் அவரை முற்றுகையிட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)