Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

உலகப் பொருளாதார சிக்கலைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடரும்

01/05/2026 06:54 PM

புக்கிட் ஜாலில், 01 மே (பெர்னாமா) -- உலகப் பொருளாதாரத்தினால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மைகளைச் சமாளிக்க, அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் பிரதமர் தெரிவித்தார். 

கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இம்மாதம் உலகப் பொருளாதாரத்தின் நிலைமை மேலும் சவாலை எதிர்நோக்கியிருப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார். 

''பிப்ரவரி மாத இறுதியில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 70 அமெரிக்க டாலராக இருந்தது. இன்று அதன் விலை ஒரு பீப்பாய்க்கு 115 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு மிகவும் அதிகம். அதாவது பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மையின் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படுகிறது. டீசல் விலை உயர்வுடன், குறுகிய காலத்தில் ஃபொஸ்ஃபாட் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பண்ணைகளில் வேலை செய்பவர்களுக்குத் தேவையான பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், லாரிகளை ஓட்டுபவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார் அவர். 

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின கொண்டாட்டத்தில், நிதி அமைச்சருமான அன்வார் உரையாற்றினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]