சண்டக்கான், 05 மே (பெர்னாமா) -- சபா, சரவாக் மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேசத்தில் உள்ள 23 வகையான தரைவழி சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கு உதவித் தொகைப் பெற்ற டீசல் கட்டுப்பாட்டுச் செயல்முறை எஸ்.கே.டி.எஸ் பதிவை, இணையம் வழியாகவும் நேரடியாகவும் செய்வதற்கான வசதிகளை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் வழங்குகிறது.
இதுவரை, பதிவுச் செயல்முறையை மட்டுமே உள்ளடக்கியுள்ளதாகவும் எஸ்.கே.டி.எஸ்-இன் செயலாக்கத்தை இன்னும் அது உட்படுத்தவில்லை என்று கே.பி.டி.என் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.
திங்கட்கிழமை முதல், வழங்கப்பட்டுள்ள இணைப்பின் வழியாக மைசப்சிடி (MySubsidi) இணையத் தளத்தில், அதற்கான பதிவு விண்ணப்பத்தைச் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
''எனவே, சபா, சரவாக் மற்றும் லபுவான் வட்டாரங்களுக்கான இணையம் வழிப் பதிவைத் தவிர, கே.பி.டி.என் அமைச்சின் நிரந்தர வளாகங்களிலோ, அதன் மாநில அலுவலகங்களிலோ அல்லது கிளைகளிலோ நேரடிப் பதிவையும் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்,'' என்று அவர் குறிப்பிட்டார்.
இணைய அணுகல் சிக்கல்களை எதிர்கொள்ளும் கிராமப்புற நிறுவனங்களுக்காக, ரஹ்மா மடானி விற்பனைத் திட்டம், சிறு கண்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வாடிக்கையாளர் சந்திப்பு நாள்கள் போன்ற கே.பி.டி.என்-னின் களத் திட்டங்கள் மூலமாகவும் நடமாடும் முகப்புகளும் அமைக்கப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)