Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 

பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு மத்தியில் நிலையாக உள்ள கூட்டுறவு நிறுவனங்கள்

05/05/2026 03:24 PM

கோலாலம்பூர், 05 மே (பெர்னாமா) -- நாட்டின் பொருளாதாரத் துறை பாதித்துள்ள நிலையில், மலேசியாவில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் இதுவரை நிலையாக உள்ளதாகத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ முஹமட் அலாமின் தெரிவித்தார்.

ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாகத் தீர்ப்பதை உறுதி செய்வதற்காக, தமது தரப்பு தற்போதைய நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

தற்போதைய பொருளாதார சவால்களைச் சமாளிக்க குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் உதவுவதற்காக, மொராடொரியம் (MORATORIUM) எனப்படும் வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தும் கால அவகாச ஒத்திவைப்பு மற்றும் பல்வேறு ஆதரவுத் திட்டங்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தமது தரப்பு மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)