Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஹன்டா நச்சுயிரியால் பாதிக்கப்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்ட ஸ்பெயின்

06/05/2026 05:47 PM

கேப் வெர்ட், 06 மே (பெர்னாமா) -- மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான கேப் வெர்ட் அருகே, ஹன்டா எனும் நச்சுயிரியால் பாதிக்கப்பட்ட சொகுசு கப்பலின் பயணிகளை ஏற்றுக் கொள்ள ஸ்பெயின் முன்வந்துள்ளது.

அனைத்துலக சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஸ்பெயின் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

எம்.வி. ஹோண்டியஸ் எனும் அந்த  சொகுசு கப்பல் கேப் வெர்ட் கடலோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 

அந்த கப்பலில் பயணித்த 147 பயணிகளில் சிலருக்கு ஹன்டா எனப்படும் நச்சுயிரியால் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இதனால் மூவர் பலியாகி உள்ளனர். 

மீதமுள்ள பயணிகளுக்கும்  நச்சுயிரி பரவக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்த நிலையில், அவர்கள் அக்கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கப்பலில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டிய நபர்களைக் கண்டறிவதற்காக, ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், பயணிகளீண் நிலைமை குறித்து ஒரு விரிவான மதிப்பீட்டை நடத்தி வருகிறது.

பயணிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 

மேலும், அவர்களைக் கையாளுவதற்கும் வெளியேற்றுவதற்கும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் மூலம் அவர்கள் நிர்வகிக்கப்படுவார்கள்.

உள்ளூர் மக்களுடன் தொடர்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இந்தச் செயல்முறை மேற்கொள்ளப்படவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)