கோலாலம்பூர், 11 மே (பெர்னாமா) -- தனது சேவை காலம் முடிந்த பின்னர், அரசியலிலோ அல்லது வர்த்தகத்திலோ ஈடுபடும் எண்ணம் தமக்கில்லை என்று எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி திட்டவட்டமாக கூறினார்.
வரும் மே 12-ஆம் தேதி தனது 63-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் அவர், பணி ஓய்வுக்குப் பின்னர், பொதுமக்களில் ஒருவராக சமூகத்திற்குத் தமது சேவையையும் அனுபவங்களையும் தொடர்ந்து பங்களிப்பதே தனது முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று, எஸ்.பி.ஆர்.எம் வெளியிட்ட சிறப்பு podcast அமர்வில், அரசியலில் நுழைய விரும்பவில்லை என்றும், தற்போதைக்கு வர்த்தம் செய்வதும் தனது திட்டங்களில் இல்லை என்றும் டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
''இல்லை. ஏனெனில், அரசியல் என் துறை அல்ல. வியாபாரமும் அப்படித்தான். நான் வியாபாரம் செய்யவதற்காக பணிஓய்வு பெறவில்லை. நாம் இந்த உலகத்தை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதுதான் முக்கியம். நான் அதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். இந்த உலகத்தை நிர்வகிக்கும்போது, சேவை செய்வதன் மூலமும் சிறப்பாகச் செயல்படுவதன் மூலமும் நிர்வகியுங்கள். அப்போது நீங்கள் சமூகத்திற்குப் பயனுள்ள ஒருவராக மாறுவீர்கள். நிச்சயமாக உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கு மற்றும் சமூகத்திற்கும் கூட மாறுவீர்கள்,'' என்றார் அவர்.
பணிஓய்வு என்பது பங்களிப்பை நிறுத்துவதற்கான காரணம் அல்ல என்றும், மாறாக மக்களுக்குச் சேவை செய்வதைத் தனிப்பட்ட மனநிறைவைத் தரும் ஒரு வகையான செயல் என்றும் அவர் விவரித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]