| BREAKING NEWS | Over RM15 billion in financing support provided to micro, small and medium enterprises this year - MoF | |
பொந்தியான், 14 மே (பெர்னாமா) -- சான்றிதழ் மற்றும் டிப்ளோமா கல்வித் தகுதிகள் மட்டுமின்றி, இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளையும் வழங்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 36 பாலிடெக்னிக் கல்லூரிகளின் பங்களிப்பை வலுப்படுத்துவதற்காக அவற்றை மறுசீரமைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
தற்போதைய மற்றும் எதிர்காலத் தொழில்துறையின் தேவைகளை அக்கழகம் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதே இந்நடவடிக்கையின் நோக்கம் என்று, உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.
அது தொடர்புடைய சட்டத்தை அமைச்சு மறுஆய்வு செய்து வருவதோடு அனைத்து 36 பாலிடெக்னிக் கல்லூரிகளையும் உள்ளடக்கிய மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான பரிந்துரை, இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் விவரித்தார்.
''உதாரணத்திற்கு, செயற்கை நுண்ணறிவு, மின்சாரம் மற்றும் மின்னியல், மின்னியல் உபரிப்பாகம் போன்ற துறைகளில், மலேசியா உலகின் மிகப்பெரிய மின்னியல் உபரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது,'' என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று, பொந்தியானில் உள்ள பொந்தியான் சமூகக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)