லண்டன், 18 மே (பெர்னாமா) -- செல்சியின் பொற்காலத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளின் ஒரு அங்கமாக ஸாபி அலோன்சோவை புதிய நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்க அக்கிளப் முடிவெடுத்துள்ளது.
அடுத்த நான்கு பருவங்களுக்கு, ஸாபி அலோன்சோ அணியின் புதிய பயிற்றுநராக பணியாற்றவுள்ளதாக நேற்று அக்கிளப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
எஃப்.ஏ. கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி அணியுடன் செல்சி தோல்வி கண்ட நிலையில் ஸாபி அலோன்சோவின் உதவியை அக்கிளப் நாடியிருக்கிறது.
நீண்ட கால ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, 44 வயதான அவர் ஜூலை முதலாம் தேதி தொடங்கி அதிகாரப்பூர்வமாக தமது பணியைத் தொடங்குவார் என்று செல்சி கூறியது.
இப்பருவம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு ஆட்டங்களே மீதமுள்ள நிலையில், இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் தற்போது ஒன்பதாவது இடத்தில் இருக்கும் செல்சி அடைவுநிலை தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.
லிவர்பூல் அணிக்காக 210 போட்டிகளில் விளையாடியிருக்கும் அலோன்சோ, இந்த நியமனத்தின் வழி மீண்டும் இங்கிலாந்து காற்பந்து களத்திற்குத் திரும்பியிருக்கிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)