Ad Banner
Ad Banner
 பொது

சவால்களை எதிர்கொள்வதில் மக்கள் தலைவர்கள் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்

07/06/2026 05:47 PM

சுங்கை பட்டாணி, 07 ஜூன் (பெர்னாமா) -- தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் மக்கள் தலைவர்கள் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், நாட்டின் வளர்ச்சித் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக மடானி அரசாங்கத்துடன் இணைந்து உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட போதிலும், மக்கள் வைத்துள்ள நம்பிக்கைகள் அனைத்தையும் தொடர்ந்து நிறைவேற்றுவது தலைவர்களின் கடப்பாடாகும் என்று அவர் கூறினார்.

''(ஒரு நாட்டை) மேம்படுத்துவது என்பது மிகவும் சவாலானதும் கடினமானதும் ஆகும்; அதற்கு அதிக பொறுமையும் திறனும் தேவை. இந்தப் பொறுமை குர்-ஆனில் வலியுறுத்தப்பட்டுள்ளது, மேலும் அது எளிதானதல்ல. மக்களுக்கு அறிவுரை கூறுவதும், அவர்களை அவமதிப்பதும் எளிது. உதாரணமாக, ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ், யு.இ.சி விஷயத்தில் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். ஆனால், கடந்த காலத்தில் பாஸ் மற்றும் பெர்சத்து ஆகிய இரு கட்சிகளுமே யு.இ.சி-ஐ அங்கீகரிப்பதை ஆதரித்தன; தற்போதைய நிலைமைக்கு என்ன வித்தியாசம்?,'' என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று, ஞாயிற்றுக்கிழமை, சுங்கை பட்டாணியில் உள்ள மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில், கெடா மாநில மத்திய துறைகளின் தலைவர்கள் மற்றும் மத்திய கிராம வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக் குழுவுடன் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் இவ்வாறு கூறினார்.

மேலும், மக்கள் தலைவர்களுக்கு போதுமான தகவல்கள் இருக்க வேண்டும் என்றும், அவற்றைப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கான சிறந்த வழிமுறையை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)