Ad Banner
Ad Banner
 பொது

சுங்கை பட்டாணியில் கோரவிபத்து; ஆறு மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் பலி

07/06/2026 06:37 PM

சுங்கை பட்டாணி, 07 ஜூன் (பெர்னாமா) --  கெடா சுங்கை பட்டாணிக்கு அருகிலுள்ள கம்பொங் பாரு பினாங் துங்காலில், 10 டன் எடை கொண்ட மண் லாரியும் புரோட்டொன் எக்ஸ்50 ரக காரும் மோதிக்கொண்ட விபத்தில், ஆறு மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுவர் உயிரிழந்தனர்.

அந்தச் சம்பவம் தொடர்பாக, பிற்பகல் மணி 3.46-க்கு தமது தரப்பிற்கு அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகத் திக்காம் பத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய தலைவர் ஃபௌசி ஷுஐப் தெரிவித்தார்.

சம்பவ இடத்திலேயே அறுவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், மூன்று வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில், 27 வயது அஹ்மட் ஷாஃபிக் அஹ்மட் ஷுக்ரி, 55 வயது நோரா முஹமட் ஹுசின், 27 வயது ஜமாலியா சனுசி மற்றும் 21 வயது அஹ்மட் ஃபஹிம் அஹ்மட் ஷுக்ரி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் ஏழு வயது சிறுவன் ஒருவனும், ஆறு மாதக் குழந்தையும் பலியானதை Fauzi Shuaib உறுதிப்படுத்தினார்.

படுகாயமடைந்த 3 வயது சிறுமி, அவ்லியா சோஃபியா அஹ்மட் ஷஃபிக் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)