Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கெடா மாநில சட்டமன்ற முன்னாள் துணைச் சபாநாயகர் சடலமாக மீட்பு

07/06/2026 05:35 PM

அலோர் ஸ்டார், 07 ஜூன் (பெர்னாமா) -- கெடா மாநில சட்டமன்ற முன்னாள் துணைச் சபாநாயகர் டத்தோ முஹமட் ஜாமில் முஹமட் இட்ரோஸ் இன்று காலை, அலோர் ஸ்டாரின் ஜாலான் தண்டோப் பகுதியில் உள்ள தெலுக் பாகன் ஆற்றில் தவறி விழுந்ததாக நம்பப்படும் நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அவரின் உடல், காலை மணி 8.10 அளவில் அந்த ஆற்றில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அலோர் ஸ்டார் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்களால் கண்டெடுக்கப்பட்டதாகக் கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷேட் பஸ்ரி ஷேட் அலி கூறினார்.

அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் சுல்தானா பஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வேளையில், சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)