Ad Banner
Ad Banner
 பொது

இசா அப்துல் சமாட்டின் 'டான் ஶ்ரீ' பட்டம் மீட்டுக் கொள்ளப்பட்டது

11/06/2026 07:33 PM

கோலாலம்பூர், 11 ஜூன் (பெர்னாமா) --  ஃபெல்டாவின் முன்னாள் தலைவர் டத்தோ முஹமட் இசா அப்துல் சமாட்டிற்கு வழங்கப்பட்ட டான் ஶ்ரீ பட்டம் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி டான் ஶ்ரீ அந்தஸ்தை வழங்கும் டர்ஜா பங்லிமா செத்தியா மக்கோத்தா DARJAH PANGLIMA SETIA MAHKOTA, PSM எனும் அப்பட்டத்தைத் திரும்பப் பெற மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் வழங்கியுள்ளார். 

முகமது ஈசா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தற்போது சிலாங்கூரில் உள்ள சுங்கை பூலோ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருவதால் அவருக்கு வழங்கப்பட்ட டான் ஶ்ரீ பட்டம் ரத்து செய்யப்பட்டது. 

மலேசிய மலாய் ஆட்சியாளர்களின் ஆணைச் சட்டத்தின் படி, பட்டம் பெறுபவர் ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டால், அந்த பட்டம் ரத்து செய்யப்படலாம் என இன்று பிரதமர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி, 30 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக முஹமட் ஈசாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் கூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)