தெஹ்ரான், 11 ஜூன் (பெர்னாமா) -- வட்டாரப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள 18 முக்கிய அமெரிக்க இராணுவத் தளங்கள் தாக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
குவைத்தில் உள்ள அலி அல் சலேம், அஹ்மத் அல் ஜாபர் (ALI AL SALEM, AHMAD AL JABER) மற்றும் பஹ்ரைனில் உள்ள ஷேக் ஈசா விமானப்படைத் தளங்களும் அந்த இலக்குகளில் அடங்கும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் பாதுகாப்புப் படை கூறியது.
Bahrain-னைக் கொண்டு, அமெரிக்க கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவுக்குச் சொந்தமான பேட்ரியாட் Patriot வான் பாதுகாப்பு செயல்முறை மற்றும் தகவல் தொடர்பு வசதிகளையும் குறிவைத்திருப்பதாக ஈரான் இராணுவம் கூறியது.
தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படையை நோக்கி ஓர் ஆளில்லா விமானத்தை ஈரான் இராணுவம் அனுப்பியது.
இறுதி வரையில் போராடத் தயாராக இருக்கும் ஈரான் படைகள் பின்வாங்கப் போவதில்லை என்று சூளுரைத்துள்ளன.
அமெரிக்கா–ஈரான் பரஸ்பர தாக்குதல்களால் வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)