விளையாட்டு

பிரான்ஸிடம் 1-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்ந்தது

23/11/2022 05:19 PM

கத்தார், 23 நவம்பர் (பெர்னாமா) -- இன்று அதிகாலை நடைபெற்ற உலகக் கிண்ணத்தின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு வெற்றியாளரான பிரான்ஸிடம் 1-4 என்ற கோல் கணக்கில் சொக்ரூஸ் வீழ்ந்ததையடுத்து, அதன் பயிற்றுனர், கிரஹம் அர்னோல்ட், அவ்வணியை வீழ்த்துவது என்பது எளிதான ஒன்றல்ல என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

இம்முறை ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் கூட்வின் அடித்த கோலால் ஆஸ்திரேலியா முன்னிலை வகித்தபோது, ஆட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்த நினைத்த அவ்வணியின் திறன் வெளிப்பட்டது.

இருந்தபோதிலும், பிரன்ஸின் அட்ரியன் ரேபியட் ஒரு கோல் புகுத்தி ஆட்டத்தைச் சமநிலை படுத்திய வேளை, முதல் பாதி ஆட்டத்தில் ஒலிவியர் ஜிரொட் இரண்டாவது கோலைப் புகுத்தி அவ்வணியை முன்னிலைபடுத்தினார்.

68-ஆவது நிமிடத்தில் கிலியன் எம்பாப் அடித்த மூன்றாவது கோலைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 71-ஆவது நிமிடத்தில் ஜிரொட் மற்றுமொரு கோலைப் புகுத்தி பிரான்ஸின் வெற்றியை உறுதிச் செய்தார்.

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும், டி குழுக்கான ஆட்டத்தில் டென்மார்குடன் மோதி கோல் ஏதுமின்றி சமநிலை கண்ட துனிசியாவை ஆஸ்திரேலியா சந்திக்கும்.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)