விளையாட்டு

மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பை விற்கும் முயற்சியில் அவ்ராம் க்லேசர்

23/11/2022 06:19 PM

வரியஸ், 23 நவம்பர் (பெர்னாமா) -- மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பை விற்பதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், புதிய முதலீடுகளைப் பெறுவதற்கும் அதன் உரிமையாளர் அமெரிக்க செல்வந்தரான அவ்ராம் க்லேசர் முயற்சித்து வருகிறார்.

ஓல்ட் த்ரெஃபோர்ட் கிளப்பின் ஒரு பகுதியை விற்பதற்கோ, அல்லது காற்பந்து அரங்கம் மற்றும் உள்கட்டமைப்பை மறுமேம்பாடு செய்வதற்கான முதலீடுகள் குறித்து நிதி ஆலோசகர்களுடன் அவ்ராம் க்லேசர் ஆலோசித்து வருகிறார்.

இரசிகர்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றுவதையும், மான்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்கு இன்றும் எதிர்காலத்திலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதையும் உறுதிசெய்ய அனைத்து ஆலோசனைகள் மதிப்பீடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்தவொரு கிண்ணத்தையும் வெல்லாத காரணத்தால், அக்கிளப் பல விமர்சனங்களை எதிர்நோக்கி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம், பிரிட்டன் செல்வந்தர் ஜிம் ரெட்க்லிஃப்  மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினார்.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)