விளையாட்டு

ஜெர்மனியை ஜப்பான் அதிர்ச்சியில் உறைய வைத்தது

24/11/2022 04:27 PM

கத்தார், 24 நவம்பர் (பெர்னாமா) -- உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் நான்காம் நாளான நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், ஜெர்மனி, முதல் ஆட்டத்திலேயே தோல்வி கண்டு தனது இரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்தது.

ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் தக்குமா அசானொ, இரண்டாவது கோலை அடித்து ஜப்பானின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்நிலையில் ஜெர்மனியை 2-1 என்ற கோல்களில் ஜப்பான் வீழ்த்தியதன் மூலம் கிடைத்த வெற்றியை, வரலாற்று வெற்றியாகத் தாம் பார்ப்பதாக அதன் பயிற்றுநர் ஹஜிமி மொரியாசு கூறினார்.

காற்பந்து துறையில், ஜப்பான், உலகளாவிய தரத்தை நோக்கி முன்னேறுவதாகவும் அவர் கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், இ குழுவுக்கான ஆட்டத்தில் கோஸ்தா ரிக்காவை 0-7 என்ற கோல்களில் வீழ்த்தி, ஸ்பெயின் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

முதல் பாதி ஆட்டத்தில் டானி ஒல்மோ, மார்கோ அசென்சியொ, ஃபெரன் தொரெஸ் ஆகியோர் மூன்று கோல்கள் அடித்தனர்.

பிற்பாதி ஆட்டத்தில் மேலும் நான்கு கோல்களை அடித்து தனது அபார வெற்றியை ஸ்பெயின் உறுதிச் செய்தது.

ஃஎப் குழுவுக்கான மற்றொரு ஆட்டத்தில், மொரொக்கொவும் க்ரோதியாவும் கோல்கள் ஏதும் போடாமல் சமநிலைக் கண்டன.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)