உலகம்

ஹமாசை முற்றாக ஒழிக்கும் கட்டத்தை நெருங்கியது இஸ்ரேல் - பெஞ்சமின்

02/07/2024 08:03 PM

ஜெருசலேம், 02 ஜூலை (பெர்னாமா) -- ஹமாஸ் அமைப்பை முற்றாக ஒழிக்கும் கட்டத்தை இஸ்ரேல் நெருங்கி விட்டதாக அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்திருக்கிறார்.

ஹமாசின் இராணுவம் மற்றும் திறன்களை அழிப்பதில் தனது அரசாங்கம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை முற்றாக ஒழிக்கும் இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல்  கையாண்டு வருகிறது.

ஹமாஸ் மேற்கொண்ட திடீர் தாக்குதலால், இஸ்ரேலைச் சேர்ந்த 1200 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதற்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில், ஹமாஸ் படையை முற்றாக ஒழிப்பதில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது.

இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதலால், இதுவரை காசாவில் 37,700 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. கூறுகிறது.

மேலும், காசாவிற்கான உணவு, மருந்து மற்றும் அடிப்படைப் பொருட்களின் விநியோகத்தைப் போர் பெருமளவில் பாதித்துள்ளது.

இதனால், அங்குள்ள மக்கள் முற்றிலும் உதவியை நம்பியுள்ளனர்.

மற்றொரு நிலவரத்தில், போரினால் காசாவில் அவதியுறும் மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் உள்ளதாக ஐ.நா. பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்திருக்கிறார்.

ஜூன் மாதம் முழுவதும், வடக்கு காசாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள இஸ்ரேல் படையினர் தடையாக இருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)