அரசியல்

சுங்கை பாக்காப் வாக்காளர்களை மிரட்டினேனா? - மறுத்தார் சாஹிட்

04/07/2024 05:38 PM

கோலாலம்பூர், 04 ஜூலை (பெர்னாமா) -- சுங்கை பாக்காப் சட்டமன்றத்தில் மேற்கொள்ளப்படவிருந்த இரண்டு திட்டங்களின் வழி அத்தொகுதி வாக்காளர்களை மிரட்டியதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை துணைப் பிரதமர்  டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிடி ஹமிடி மறுத்துள்ளார்.

''ஒரு வாக்குறுதி அல்ல. ஆனால், நேற்றிரவு என்னுடைய உரையை ஆராய்ந்தால் ரத்து செய்யப்பட்ட தமிழ்ப்பள்ளி நிர்மானிப்பு திட்டம் மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் பரிந்துரைத்திருந்தேன். இதற்கு காரணம், அப்போது அதற்கான ஒதுக்கீடு இருந்தது. ஆனால், அது வேறு இடத்திற்கு வழங்கப்பட்டு விட்டது,'' என்றார் அவர். 

தமிழ்ப்பள்ளி ஒன்றை நிர்மானிக்கும் திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் பராமறிப்பு மையம் தொடர்பான அறிவிப்பு சுங்கை பாக்காப் வாக்காளர்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக முவாஃபாக்காட் நேஷனல், எம்.என் தலைவர் டான் ஶ்ரீ அனுவார் மூசாவின் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்கையில் டாக்டர் சாஹிட் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]