உலகம்

அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வ பயணம்

06/07/2024 07:41 PM

புதுடெல்லி, 06 ஜூலை (பெர்னாமா) -- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவிருக்கின்றார்.

இப்பயணத்தில், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்திருக்கிறார்.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையில் நடைபெறவிருக்கும் 22வது உச்சநிலை மாநாட்டில், பாதுகாப்பு, வர்த்தக இணைப்புகள், முதலீட்டு உறவுகள், எரிசக்தி ஒத்துழைப்பு, அறிவியல் ஒத்துழைப்பு, கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட பல இருதரப்பு விவகாரங்களை விவாதிக்க இரு நாட்டுத் தலைவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் என்று வினய் குவாத்ரா கூறினார்.

2022-ஆம் ஆண்டு தொடங்கி உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவுடன் இந்தியா வலுவான உறவை கொண்டுள்ளது.

தாக்குதல் குறித்து இந்தியா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், அமைதி நிலவ இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

ரஷ்யா மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்தாலும், ரஷ்யாவுடன் இந்தியாவும் சீனா பொருளாதார உறவுகளை கொண்டுள்ளன.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]