விளையாட்டு

யூரோ கிண்ணத்தை வெல்லும் ஜெர்மனியின் கனவு கலைந்தது

06/07/2024 07:51 PM

முனிக், 06 ஜூலை (பெர்னாமா) -- சொந்த மண்ணில் 2024 யூரோ கிண்ணத்தை வெல்லும் ஜெர்மனியின் கனவு ஈடேராமல் போனது.

இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், ஜெர்மனி ஸ்பெயினிடம் 1-2 என்ற கோல்களில் தோல்வி கண்டது.

ஸ்டுட்கார்ட் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தின் முதல் பாதி கோல் ஏதும் இல்லாமல் சமநிலை கண்டது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து  ஜெர்மனியை ஸ்பெயின் பின்னுக்கு தள்ளியது.

அதன் பின்னர் 89-வது நிமிடத்தில் உபசரணை நாடான ஜெர்மனி 89-வது நிமிடத்தில் தனது ஒரே கோலை அடித்து ஆட்டத்தை சமப்படுத்தியது.

முழு ஆட்டமும் சமநிலை கண்டதால், வெற்றியாளரை தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

அதனை சாதாகமாக பயன்படுத்திக் கொண்ட ஸ்பெயின் 119-வது நிமிடத்தில் தனது வெற்றி கோலை அடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

இன்று அதிகாலை நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.

போர்த்துகலுடன் களம் கண்ட இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமைந்தது.

இரு அணிகளுமே கோல் போடுவதில் பல முயற்சிகளை மேற்கொண்டாலும், முழு ஆட்டமும் கோல் இன்றி நிறைவு பெற்றது.

வெற்றியாளரைத் தீர்மானிக்க ஆட்டம் பினால்டி வரை சென்றது.

அதில் 5-3 என்ற கோல்களில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]