உலகம்

உத்தரப் பிரதேசத்தில் 130 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு

11/07/2024 06:50 PM

அசாம், 11 ஜூலை (பெர்னாமா) -- இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் உள்ள 130 கிராமங்கள் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில், கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், வெள்ள நிலைமை மேலும் மோசமடையலாம் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

அசாம் மாநிலத்தில் உள்ள ஒன்பது ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

மேலும், பிரம்மபுத்திரா ஆற்றின் நீர் மட்டம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிகார் மாநிலத்தில் உள்ள சில ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அண்டை நாடான நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் இதுவரை 133 கிராமங்கள் மூழ்கியிருக்கும் நிலையில், விவசாய நிலங்களும் முற்றாக அழிந்துள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)