பொது

டீசல் உதவித் தொகை மறுசீரமைப்பு திட்டத்தினால் பொருட்கள் விலையேறவில்லை

16/07/2024 06:37 PM

கோலாலம்பூர், 16 ஜூலை (பெர்னாமா) -- ஜூன் 10-ஆம் தேதி தொடங்கி அமல்படுத்தப்பட்ட டீசல் உதவித் தொகை மறுசீரமைப்பு திட்டத்தினால், வழக்கத்திற்கு மாறான பொருட்களின் விலையேற்றம் இல்லை.

ஆதாயம் ஈட்டும் நடவடிக்கை இல்லாததை உறுதி செய்ய, ஓப்ஸ் கெசான் வழியாக அமைச்சின் அமலாக்க பிரிவு 14 ஆயிரத்து 195 சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் ஃபுசியா சாலே கூறினார்.

"தேசிய பொருட்களின் விலைப் பிரிவு 418 வகையான அன்றாடத் தேவைப்படும் பொருட்களைக் கண்காணித்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் நாங்கள் ஆய்வு செய்யும் தரவுகளின் அடிப்படையில் வழக்கத்திற்கு மாறான ஏற்ற இறக்கங்கள் எதுவும் இல்லை" என்றார் அவர்,

இன்று மக்களவையில், உலு திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரொசொல் வாஹிட் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)