பொது

நூர் ஃபாராவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு 

18/07/2024 04:11 PM

கோலாலம்பூ, 18 ஜூலை (பெர்னாமா) -- இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நூர் ஃபாரா கார்த்தினி அப்துல்லா எனும் பெண்ணின் சடலம் இன்று அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உலு சிலாங்கூர், கம்போங் ஶ்ரீ கிளேடாங்கில், 25 வயதான அப்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து பிரேதப் பரிசோதனையும் மரபணு சோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

வேதியியல் துறை மேற்கொண்டுள்ள மரபணு சோதனை முடிவின் அடிப்படையிலேயே, அப்பெண்ணின் சடலம் அவரின் குடும்பத்திடம் ஒப்படைப்பட்டதாக அவர்  கூறினார்.

சடலத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில், நூரின் குடும்ப உறுப்பினர்கள் இன்று சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு வந்திருந்தனர்.

ஜூலை பத்தாம் தேதியிலிருந்து காணாமல் போன நூர் ஃபாரா கார்த்தினி திங்கட்கிழமை மாலை மணி ஆறு அளவில் உலு சிலாங்கூர், கம்போங் ஶ்ரீ கிளேடாங்கில் உள்ள செம்பனை தோட்டம் ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் போலீஸ் உறுப்பினர் ஒருவர், ஜூலை 22-ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)