உலகம்

தென்மேற்கு சீனா: பேரங்காடி தீயினால் 16 பேர் பலி

18/07/2024 05:40 PM

சிகோங், 18 ஜூலை (பெர்னாமா) -- தென்மேற்கு சீனாவில் உள்ள பேரங்காடி ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

தீயைக் கட்டுப்படுத்தியது மற்றும் அச்சம்பவம் தொடர்பிலான மீட்புப் பணி நேற்று பின்னிரவு மூன்று மணியளவில் நிறைவுற்றதாக, உள்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை தெரிவித்தது.

புதன்கிழமை இரவு, சிச்சுவானில் உள்ள சிகோங் பேரங்காடியின் 14-வது மாடியில் கடுமையான கரும்புகை வெளியான காணொளி அந்நாட்டு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்டது.

கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள ஒரு பேரங்காடியில் புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவ்வளாகத்தில் இருந்த 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மேலும், இரவு 8.20 மணியளவில் அங்குப் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இச்சம்பவத்தில் யாரும் சிக்கிக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]