பொது

நூர் கர்தினி கொலை வழக்கு; ஆதாரங்களைத் தேடும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது

19/07/2024 08:04 PM

பேராக், 19 ஜூலை (பெர்னாமா) - இன்று அதிகாலை பெய்த மழையினால், பேராக், சிலிம் ரிவர், கம்போங் பத்து 4-இல் உள்ள ட்ரோலாக் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து கலங்கிய நிலையில் இருந்ததால், நூர் கர்தினி அப்துல்லாவின் கொலை வழக்கு தொடர்பான ஆதாரங்களைத் தேடும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதியில் ஆற்றின் நீர் மட்டம், ஒரு மீட்டருக்கு மேல் உயர்ந்ததைத் தொடர்ந்து அந்நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர்,
சுப்ரிடெண்டன் அஹ்மட் ஃபைசால் தஹ்ரிம் தெரிவித்தார்.

மரத் துண்டுகள் கிடக்கும் அந்த ஆற்றின் நிலை மற்றும் அமைப்பைக் கருத்தில் கொண்டு தேடல் பணியை மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதால் அம்முயற்சி ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை மணி 11.10 அளவில், தேடல் பகுதியில் அரச மலேசிய போலீஸ் படையின் நீர்நிலை தடயவியல் விசாரணைப் பிரிவின் 10 அதிகாரிகளும் உறுப்பினர்களும் அடங்கிய இரு நான்கு சக்கர வாகனங்கள் வந்ததை பெர்னாமா தொலைக்காட்சி கண்டறிந்தது.

ஆனால், நீர் மட்டம் உயர்ந்தும், கலங்கிய நிலையில் இருந்ததால், தேடல் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)