பொது

மலாயா புலிகளின் பாதுகாப்பு முயற்சிகளை அதிகரிக்க அரசாங்கம் உறுதி

21/07/2024 07:43 PM

கெப்போங், 21 ஜூலை (பெர்னாமா) -- நாடு தழுவிய அளவில், 150-க்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் மலாயா புலிகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை அதிகரிக்க அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது.

அவற்றில், மூத்த போலீஸ் பணியாளர், மூத்த இராணுவ வீரர், பழங்குடியினர் மற்றும் உள்ளூர்வாசிகளைக் கொண்டு, அதற்கான பாதுகாவலர்களை ஆயிரத்திலிருந்து ஈராயிரமாக அதிகரிப்பதும் அடங்கும் என்று இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்தார்

இன்று கோலாலம்பூரில் மே பேங்கும் உலக இயற்கைக்கான நிதி, WWF-பும் இணைந்து ஏற்பாடு செய்த 'Run For Tigers' போட்டியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர் சந்திப்பில் அவ்வாறு கூறினார்.  

மலாயா புலிகளின் வாழ்விடங்கள் குறையும் வேளையில், இட நெருக்கடி காரணமாக அவை வாழ்வதற்கு பெரும் சவால்கள் ஏற்படுவதையும் நிக் நஸ்மி சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)